Jun 8, 2007

கத சொல்றேன்...

ஒரு இன்ஸூரன்சு ஏஜண்டு ஜோசியகாரங்கிட்ட ஜாதகம் பாக்க போனான், அவரு உனக்கு சாவு நெருங்கிகிட்டிருக்கு எங்கேயும் வெளியே கிளிய போவாதப்பான்னு சொன்னாரு.

அவனும் சாவுக்கு பயந்துட்டு வீட்டுக்குள்ளயே மொடங்கி கெடந்தான். அடடா இந்த வருச டார்கெட்ட முடிக்க முடியாமயே செத்துவனேன்னு பொலம்பிகிட்டே இருந்தான்.

ஒரு நாள் எமதர்மனோட கிங்கரன் அவன் வீட்டுக்குள்ளயே வந்தான்..

இவன் ரொம்ப பயந்து மூஞ்சியெல்லாம் வெளிறிப்போயி நடுங்கிட்டே.. "தயவுசெஞ்சு என்ன கொன்னுடாதீங்க நானு நெறையா சாதிக்கவேண்டியிருக்கு"ன்னான்.
அதுக்கு கிங்கிரன் சிரிச்சிகிட்டே... "அப்பா! உனக்கு சாவு கிடையாது, நீ தாராளமா வெளியில போயி உன்னோட வேலைகள செய்யி"ன்னு சொன்னான்.

இப்போதா அவனுக்கு நம்பிக்கையே வந்து கிங்கிரனுக்கு நன்றி சொல்லீட்டு, தெகிரியமா வெளிய போனான். கொஞ்ச நேரத்தில எதுத்தாப்பல வந்த லாரி, அவமேல மோதிட்டுது... செத்துப்போயிட்டான்.

அப்போ அவனோட உசுர கொண்டுபோகறதுக்கு அதே கிங்கரன் வந்தான், "வாப்பா எமலோகத்துக்கு போகலாம்"ன்னு சொன்னான்.
உடனே செத்தவனோட உசுரு கேட்டுச்சு "நீ சொன்னத நம்பித்தான நா வெளியில வந்தேன். இப்போ பாரு நான் செத்து போயிட்டேன்"னுச்சு.

அதுக்கு கிங்கரன் சொன்னான் "இதப்பாரு உன்ன மாதிரிதான் நாங்களும் இந்த மாச டார்கெட்ட முடிக்கிறதுக்கு ஒரு உசுருதா தேவப்பட்டுது, சாவுக்கு பயந்தவனத்தா புடிக்கணும்னு எமனோட கட்டள அதனால தான் இப்படி சொல்ல வேண்டியதாப்போச்சு, என்னோட டார்கெட்ட அச்சீவ் பண்ணீட்டேன், வா போகலாம்னு" கூட்டிடு போயிட்டான்.

அதனால சாவு எப்டி வேணா வரும், அதுக்கு பயந்துகிட்டு மொடங்கி கெடக்காம.. போயி வேலயப்பாருங்கப்பு...

0 Comments: